புத்தர் வடிவில் டொனால்ட் டிரம்ப் சிலை: பல மடங்கு அதிகரித்த வாங்குவோர் எண்ணிக்கை
புத்தர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புத்தர் வடிவில் டிரம்ப்
சீனாவை சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் சிலை தோற்றத்துடன் உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதன் விலை சுமார் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் இதனை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
Apparently Trump “Buddha” statues are making quite the wave in China pic.twitter.com/otUTgw0xRz
— Abhinav Kukreja (@kukreja_abhinav) July 11, 2024
முதன் முதலில் 2021ம் ஆண்டு டிரம்ப்பின் சிலை சீன ஆன்லைன் விற்பனை தளத்தில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து டிரம்ப்பின் சிலை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிற்பி ஹாங் ஜின்ஷி ஆன்லைன் மூலம் டிரம்ப்பின் சிலையை வாங்குவதற்கு பலரும் விரும்பம் தெரிவித்து வருவதால் சிலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |