எப்போதும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்று இருக்கும்.
அந்தவகையில், எப்போதுமே இளமையாக இருக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு உலரவைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |