மூட்டு வலியை நிரந்தரமாக நீக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக வயதான பிறகு தான் மூட்டில் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலி பிரச்சினையால் பாதிப்படைகிறார்கள்.
எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும்.
அந்தவகையில், மூட்டு வலியை நிரந்தரமாக நீக்க உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
1. கொழுப்பு மீன்: கொழுப்பு மீன்கள் உடலில் உள்ள அழற்சியின் அளவைக் குறைப்பதோடு, மூட்டு வலி, விறைப்பு போன்றவற்றை குறைக்கும்.
2. மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. குர்குமின் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது.
3. இஞ்சி: இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால்கள் உடலில் அழற்சியைத் தூண்டும் கூறுகளைத் தடுக்கிறது. இதனால் இது தசை வலி மற்றும் இறுக்கத்தைப் போக்கவும் உதவுகிறது.
4. பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஒட்டுமொத்த எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
5. நட்ஸ் மற்றும் விதைகள்: நட்ஸ்கள் மற்றும் விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |