உக்ரைன் தலைநகரில் குண்டு மழை., வெளியான வீடியோ
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பலத்த சத்தத்துடன் பீரங்கி குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், கீவின் மேற்குப் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவின் (Kyiv) வடக்கே உள்ள மின் நிலையத்திற்கு அருகில் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் தொடர்ந்து 5 பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டதாக, நகர் மேயர் Vitali Klitschko தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும், குண்டுவெடிப்புகள் நடத்த இடத்தில் "அவசர சேவைகள் நடந்து வருகின்றன. நாங்கள் விவரங்களைக் கண்டுபிடித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.
Kyiv ? @unian pic.twitter.com/bCNKKhEdt1
— Alec Luhn (@ASLuhn) February 25, 2022
ரஷ்ய துருப்புக்கள் நெருங்கி வருவதால், கீவ் நகரத்தில் உள்ள பாலங்கள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நகர எல்லைகளில் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
தலைநகர் கீவிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்பதே மிகைப்படுத்தப்படாத உண்மை நிலவரம் என்று மேயர் ஒப்புக்கொண்டார்.
5 вибухів сталися з інтервалом в 3-5 хвилин біля ТЕЦ-6. Аварійно-рятувальні служби слідують туди. З’ясовуємо деталі.
— Віталій Кличко (@Vitaliy_Klychko) February 25, 2022