ஒரே நாளில் 5 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்! வேலைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து குழந்தைகள் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தை சோகத்தில் உலுக்கியுள்ளது.
அமெரிக்காவில் 5 குழந்தைகள் கொண்ட குடும்பம் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்துவிட்டது. இதனால் இல்லினாய்ஸில் உள்ள வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
வேலை காரணமாக குழந்தைகளின் தாய் Sabrina Dunigan வெளியே சென்றுள்ளார். குழந்தைகளை அவர்களது பாட்டி, தாத்தா இருவரும் கவனித்து கொண்டனர்.
இந்நிலையில் சம்பவத்தினத்தன்று குழந்தைகள் அறைக்குள் தூங்கி கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதை கவனித்த குழந்தைகளின் தாத்தா வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் தீயின் வேகம் அதிகம் காணப்பட்டதால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் அவரது மனைவியை அழைத்து கொண்டு ஜன்னல் வழியாக தப்பித்துவிட்டார்.
அந்த 5 குழந்தைகளின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதை கண்டு ஆதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அப்பொழுது தீயில் கருகி 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்துவிட்டது.
பேச்சு மூச்சு இல்லாத மற்ற 3 குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழியிலே 2 குழந்தைகள் இறந்துவிட்டது.
கடைசியில் ஒரு குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அந்த குழந்தையும் இறந்துவிட்டது.