அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளிக்கு ஐவர் பலி! இடிபாடுகளுக்குள் சிக்கியவரை மீட்கும் பரபரப்பு காட்சி
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் 5 பேர் பலியாகினர்.
பயங்கர சூறாவளி
கலிஃபோர்னியாவில் மணிக்கு 77 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட கனமழையால் திடீர் வெள்ளம் உருவானது.
சூறாவளியின் தாக்குதலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2.5 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.
இருவர் மீட்பு
இதற்கிடையில், மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் இருவர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
Today ACFD responded to a rescue emergency in the city of Newark. FFs were able to extricate two victims after a large eucalyptus tree fell on their pick-up truck. With the driver’s legs pinned,
— Alameda County Fire (@AlamedaCoFire) March 22, 2023
T28 used a ram to stabilize the tree and cut the steering wheel. #ALCOFIRE pic.twitter.com/240BvEbY9x
இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் கனமழை பெய்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாரா நெவாடாவில் அதிக அளவு உயரத்தில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
SFFD PIO / FOX Weather