ஜெருசலேம் நகரில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர்: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்
இஸ்ரேலிலுள்ள ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனியர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர்
ஜெருசலேம் நகரில் சற்று முன் பாலஸ்தீனியர்கள் இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
30 வயதுகளிலிருக்கும் ஒரு ஆண், 50 வயதுகளிலிருக்கும் ஒரு ஆண், மற்றும், ஒரு பெண் ஆகியோர்தான் உயிரிழந்தவர்கள் என இஸ்ரேல் ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 9 முதல் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் தாக்குதல்தாரிகளை சுட்டுக் கொன்றதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஜெருசலேம் நகரில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்களும் பொலிசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |