மாரடைப்பு வரக்கூடாதா? அப்படினா இந்த 5 பானங்களை அடிக்கடி குடியுங்கள்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், நாம் உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும்.
சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், அது இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
சமீப காலமாக மாரடைப்பால் தினந்தோறும் பலர் இறக்கிறார்கள். இதற்கு உணவுகளும் முக்கிய காரணமாக உள்ளன.
இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க குடிக்க வேண்டிய 6 பானங்கள் என்னவென்று பார்ப்போம்.
தண்ணீர்
உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க இன்றியமையாத ஒரு பானம்.
போதுமான அளவு தண்ணீரை ஒருவர் குடித்து வந்தால், உடலின் ஆற்றல் அதிகரிக்கும், உடல் வறட்சி மற்றும் உடல் சோர்வு தடுக்கப்படும், நச்சுக்கள் வெளியேற்றப்படும், சரும நிறம் மேம்படும், உடல் எடை குறையும்.
Alter-ego/Shutterstock.com
இது தவிர, இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
இளநீர்
இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்.
செரிமானம் சிறப்பாக நடைபெறும், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை குறையும், சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்.
herzindagi
மேலும் இரத்த அழுத்தம் குறையும், இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
மாதுளை ஜூஸ்
மாதுளையில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரத்தம் உறைவதற்கு தேவையானவையாகும்.
மேலும் இதில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் மக்னீசியம் உள்ளன.
மாதுளை ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும், இரத்த சோகை தடுக்கப்படும், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை பராமரிக்கப்படும், புற்றுநோயின் அபாயம் குறையும், நோயெதிர்ப்பு சக்தி போன்றவை மேம்படும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் வைட்டமின்களும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அளவிடக்கூடிய அளவில் காணப்படுகின்றன.
க்ரீன் டீயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோயால் ஏற்படும் மரணத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
arivudaimai
எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைப் பராமரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் விரும்பினால் க்ரீன் டீயைக் குடித்து வாருங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பருவகால நோய்களைத் தடுக்க உவுகிறது.
ஆரஞ்சு ஜூஸை காலை உணவின் போது குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும், சிறுநீரக கற்களின் அபாயம் குறையும், எடையைக் குறைக்க உதவும், இரத்த சோகையைத் தடுக்கும்.
மேலும் ஆரஞ்சு ஜூஸை குடித்து வந்தால் இதய ஆரோக்கியத்திற்கும் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |