பிரித்தானியா கைவிட்ட நாடுகடத்தும் திட்டம்: கையிலெடுக்கும் நாடுகள்
EU countries to unveil deal to start sending rejected migrants to Rwanda: புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று அறிமுகமாக உள்ளது.
பிரித்தானியா கைவிட்ட நாடுகடத்தும் திட்டம் ஒன்றை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிமுகம் செய்ய உள்ளன.
ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்
பிரித்தானியாவை ஆண்ட முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பில் திட்டம் ஒன்றை முன்வைத்தது.

ஆனால், அடுத்து வந்த லேபர் அரசைச் சேர்ந்த சர் கெய்ர் ஸ்டார்மர் அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில், ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளன.
இன்று, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் அந்நாடுகள் ஒப்பந்தம் ஒன்றைக் குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளன.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டப்படி வாழ உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோர் ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்கள்.
இத்திட்டம், அடுத்த ஆண்டு அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.