வீட்டிலேயே Facial செய்யணுமா? அப்போ இந்த 5 முறையில் செய்ங்க
ஒவ்வொருவரின் தோல் பராமரிப்பு முறையிலும் ஃபேஷியலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
இது உங்கள் சருமத்தை தளர்த்தவும், மந்தமான சருமத்தை புதுப்பிக்கவும், புதிய பளபளப்புடன் சருமத்தை அலங்கரிக்கவும் உதவுகிறது.
இந்த சிகிச்சையை வெளியில் ஒரு நல்ல ஆடம்பரமான சலூனில் செய்துகொள்ள விரும்பலாம்.
ஆனால், உங்களில் பலருக்கு சலூனுக்குச் செல்ல நேரம் கிடைக்காமல், அவசரமாக ஃபேஷியல் செய்ய வேண்டிய நேரங்கள் அடிக்கடி ஏற்படும்.
ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே எவ்வாறு எளிய முறையில் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
01. முதலில் ரோஸ் வார்டரை ஒரு துணியில் தொட்டு முகத்தை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பின் பாலாடையை முகத்தில் பூசி, அது காய்ந்தவுடன் முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.
02. உப்பு அல்லது சீனி எடுத்து அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் நன்றாக தேய்த்து பின் 2 நிமிடத்தில் கழுவிக்கொள்ளவும்.
03. கற்றாழையை கழுவி மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதை முகத்தில் பூச வேண்டும். பின் சூடான தண்ணீரில் ஆவிப்பிடிக்க வேண்டும்.
04. ஏதாவது ஒரு மரக்கறியை எடுத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டம். அதனுடன் கடலை மா சேர்த்து, முகத்தில் பூசி காய வைத்து கழுவ வேண்டும்.
05. குங்குமாதி தைலத்தை இறுதியாக முகத்தில் பூசினால் போதும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |