தினமும் தேன் சாப்பிடுவது நல்லதா? வியக்கவைக்கும் 5 மருத்துவ பலன்கள் இதோ!
பண்டைய காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தேனின் மருத்துவ பண்புகள் மற்றும் சுகாதார நன்மைகள் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. பூக்களிலிருந்து தேனீரைப் பயன்படுத்தி தேனீக்கள் தயாரிக்கும் இனிப்பு திரவம் அதற்குள் பல ஊட்டச்சத்து மதிப்புகளை மறைத்து வைத்துள்ளது.
இது பல கட்டங்களில் மிகவும் நீண்ட செயல்முறைக்குப் பிறகு தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. தேன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு மூலமாகும்.
பிரக்டோஸ், கார்போஹைட்ரேட், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் தேனின் முக்கிய ஊட்டசத்துக்குள் அடங்கியுள்ளது. சரி வாங்க தேனின் தனிப்பட்ட 5 மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்...
நன்மைகள்:-
- தேனில் இருக்கும் இயற்கையான, தனித்துவமான இனிப்பு, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சரியான உணவு ஆகும். உணவு மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால் உடலில் பல நன்மைகள் ஏற்படும்.
- இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த பயனுள்ள மருந்து என பல ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. இரவில் தேனை அளிப்பது இருமலால் அவதிப்படும் குழந்தைகள் நிம்மதியாக உறங்க உதவும் என்பதை நிரூபித்துள்ளது.
- நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனினை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் உங்கள் மனதில் உள்ளதா? தேனில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 45 முதல் 64 வரை மாறுபடுகிறது. தேனை உட்கொள்வதால் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து இரத்த சர்க்கரையின் அளவு குறையும். ஆகவே இவர்கள் கொஞ்சமாக தேனை எடுத்து கொள்ளலாம்.
- காயங்கள் மற்றும் குறிப்பாக தீக்காயங்கள் ஆகியவற்றின் மீது தேனை தடவுவது அவற்றில் காணப்படும் இறந்த தேவையற்ற செல்களை நீக்க தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
-
தேனில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதயத்தை பாதுகாக்க உதவும். இரத்தத்தில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்த காரணமான காரணிகள் மற்றும் ஆக்சிஜனேற்றத்தை உண்டு செய்யும் இணைந்த டயன் காரணிகள் போன்றவை உருவாவதை தடுக்க தேன் உதவுகிறது.