நான்கு மாத குழந்தையுடன் இறந்துகிடந்த போதைக்கும்பல்: அமெரிக்காவில் அதிர்ச்சி
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நான்கு மாத குழந்தையுடன், சட்டவிரோதமான போதைப்பொருள்களை பயன்படுத்திய 5 நபர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள நார்த் ரேஞ்ச் கிராசிங்ஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து கமெர்ஸ் நகர பொலிஸாருக்கு சுயநினைவற்ற ஒரு குழுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு சென்ற கமெர்ஸ் நகர பொலிஸார் அங்கு பெரும்பாலானோர் சுயநினைவற்று இருக்கக்கூடும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்குள் விழித்துக்கொண்ட குழு ஒன்று மருத்துவ உதவிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த மற்றொரு குழுவில் இருந்த 6 நபர்களில் 5 நபர்கள் சட்டவிரோதமான போதைப்பொருள்கள் பயன்படுத்தியதில் இறந்து விட்டதாகவும், அதில் கண்விழித்த மற்றொரு நபருடன் ஒரு 4 மாத குழந்தை இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கமெர்ஸ் நகர தலைமை காவலாளர் கிளின்ட் நிக்கோலஸ் பேசுகையில், இந்த நிகழ்வில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்திய 5 நபர்கள் இறந்து விட்டதாகவும், அதில் மூன்று பேர் பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும் தெரிவித்தார்.
இவர்களுடன் நான்கு மாத குழந்தை இருந்ததாகவும், அவர்களின் பெற்றோர் இந்த குழுவுடன் இருந்தார்களா என்பது தெரியவில்லை எனவும் அதுதொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற குடியிருப்பு பகுதியில் அங்குள்ள தீயணைப்பு துறையினர்கள் மேற்கொண்ட விஷவாவு பரிசோதனையை எதிர்மறை முடிவு வந்ததாகவும் தெரிவித்தார்.