அமெரிக்காவில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியரின் உடல்: 5 இந்திய வம்சாவளியினர் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கொலை வழக்கில் 5 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர் கொலை
டிசம்பர் 14, 2024 அன்று, மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் உள்ள கிரீன்வுட் வனவிலங்கு மேலாண்மை பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் இருப்பது குறித்து ஓசியன் கவுண்டி பொதுத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் துப்பறியும் அதிகாரிகள், சிதைந்த நிலையில் ஒருவரின் உடலை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஓசியன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகம் நடத்திய பிரேத பரிசோதனையில், மார்பில் பல துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இறந்தவர் இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் என்பது அடையாளம் காணப்பட்டது.
5 இந்திய வம்சாவளியினர் கைது
இந்நிலையில் அமெரிக்காவில் 35 வயதான இந்திய வம்சாவளி நபர் கொல்லப்பட்டதையடுத்து, 5 இந்திய வம்சாவளி ஆண்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூ ஜெர்சி மாநிலம், மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் கடந்த அக்டோபர் 22, 2024 அன்று குல்தீப் குமார் கொல்லப்பட்ட வழக்கில் நியூயார்க், தெற்கு ஓசோன் பூங்காவைச் சேர்ந்த 34 வயதான சந்தீப் குமார் என்பவர் கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டார்.
குல்தீப் குமார் கொலை வழக்கு விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தீப் குமார் வேறு சிலருடன் இணைந்து இந்த கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளான இந்தியானா, கிரீன்வுட்டைச் சேர்ந்த சௌரவ் குமார் (23), கவுரவ் சிங் (27), நிர்மல் சிங் (30) மற்றும் குர்தீப் சிங் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor's OfficeGreenwood Wildlife Management AreaManchester Township murderIndian-origin suspectsConspiracy to commit murder