ஈரான் போர்: அபுதாபியில் ஐந்து இந்தியர்கள் காயம்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்திவருவது அனைவரும் அறிந்ததே.
அவற்றில் சில நாடுகள் தங்களை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழிக்கின்றன.
என்றாலும், அப்படி தாக்கி அழிக்கப்படும் ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்து சிலரைக் காயப்படுத்திவிடுகின்றன, சிலர் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், அப்படி ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்ததில் ஐந்து இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அபுதாபியில் ஐந்து இந்தியர்கள் காயம்
ஏவுகணை ஒன்றைத் தாக்கி அழிக்கும்போது அபுதாபியிலுள்ள Khalifa Economic Zones Abu Dhabi - KEZAD என்னுமிடத்தில் விழுந்த ஏவுகணைகளின் பாகங்கள் ஐந்து இந்தியர்களைக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

என்றாலும், அவர்களுக்கு சிறிய மற்றும் மிதமான அளவிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், வியாழக்கிழமையன்று அபுதாபியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒரு இந்தியரும் ஒரு பாகிஸ்தானியரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |