5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய பயங்கரவாதிகள் - வெளிநாடொன்றில் பதற்றம்
மாலியில் 5 இந்தியர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.
5 இந்தியர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில், ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாலியில், சுரங்கம், மின்சாரம், எஃகு, சிமென்ட், மருந்து மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் சுமார் 400 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

மாலியில், அல் கொய்தா மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிக்கடி ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருவதோடு, வெளிநாட்டவர்களை கடத்தி வருகிறது.
தற்போது, மேற்கு மாலியில் உள்ள கோப்ரி பகுதியில் இயங்கி வரும் மின்மயமாக்கல் திட்ட நிறுவனத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.
தற்போது வரை இந்த கடத்தலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாதுகாப்பு கருதி, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மாலியில் அண்டை நாடுகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் லாரிகளை பயங்கரவாதிகள் சிறைபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டு வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளதால், வரும் 10 ஆம் திகதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், இந்தியர் ஒருவர் நடத்தி வரும் டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்.
செப்டம்பர் மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இருவரும், ஈரானை சேர்ந்த ஒருவரும் கடத்தப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், 50 மில்லியன் டொலர்(இந்தியா மதிப்பில் ரூ.443 கோடி) கொடுத்து கடந்த வாரம் மீட்கப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |