Castor Oil for hair growth: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு
5 things with Castor Oil for incredible hair growth: பொதுவாகவே, விளக்கெண்ணெய் என்பது நம்முடைய பாட்டி காலத்தில் இருந்தே நம்முடைய முடியை பராமரிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய பொருளாகும்.
விளக்கெண்ணெய் அடர்த்தியாகவும், ஒட்டும் தன்மையுடன் இருப்பதால் நாம் அதனை அப்படியே நேரடியாக தலைமுடியில் தடவுவது சிரமம்.

ஆனால், இயற்கையான பொருட்களை விளக்கெண்ணெயுடன் கலந்து பயன்படுத்துகின்ற பொழுது அதனுடைய தன்மை குறைவதோடு கூந்தலுக்கு கூடுதல் நன்மைகளையும் கொடுக்கிறது.
நம்முடைய உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதோடு முடி உடைந்தோ உலர்ந்தோ போவதை தடுக்க உதவுகிறது. அப்படியாக, விளக்கெண்ணெயுடன் சேர்ந்து பயன்படுத்த வேண்டிய 5 பொருட்களை பற்றி பார்ப்போம்.
1. தேங்காய் எண்ணெய்:
இதனை நான் விளக்கெண்ணெயுடன் கலக்கும் பொழுது அந்த கலவையை மென்மையாக்கி தலையில் எளிதாக தடவ உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடிக்குள் ஆழமாக ஊடுருவி கூந்தலில் உள்ள புரத இழப்பை குறைக்க உதவுவதாக Journal of Cosmetic Science ஆய்வறிக்கை கூறுகின்றன.
பயன்படுத்தும் முறை:
ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தலையில் நாம் மசாஜ் செய்யலாம். பிறகு 60 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிட்டு பிறகு முடியை அலசிக் கொள்ளலாம்.

2. கற்றாழை ஜெல்:
கற்றாழை உடல் குளிர்ச்சியை தரக்கூடியது. வறண்ட மற்றும் எரிச்சல் வருகின்ற பொழுது தலைமுடிக்கு உடனடி தீர்வை கொடுக்க கூடியது.
பயன்படுத்தும் முறை:
ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை தலையில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு ஷாம்பு போட்டு முடியை அலசிக் கொள்ளலாம்.
3. வெங்காய எண்ணெய்:
வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் சத்து முடி பராமரிப்புக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இது முடி உதிர்வை தடுக்க கூடும் என்று சில ஆய்வுகள் வெளியிட்டு இருக்கின்றன.
பயன்படுத்தும் முறை:
ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் வெங்காய எண்ணெய் கலந்து தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து முடிய அலசிக் கொள்ளலாம். சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக முடியை அலசி கொள்வது நல்லது.
4. ரோஸ்மேரி எண்ணெய்:
நம்முடைய முடி பராமரிப்பு வளர்ச்சி என்றாலே சமீப காலங்களில் ரோஸ்மேரி எண்ணெய் தான் முதல் இடத்தைபிடிக்கிறது. மேலும், 2015ல் வெளியான ஆய்வில் ரோஸ்மேரி எண்ணெய் தலையில் பயன்படுத்தியவர்களுக்கு வெறும் ஆறு மாதங்களில் முடி எண்ணிக்கை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
பயன்படுத்தும் முறை:
ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயில் வெறும் இரண்டு அல்லது மூன்று துளி ரோஸ்மேரி எசென்ஷியல் எண்ணெய் கலந்து பயன்படுத்துவது அடர்த்தியான முடியை கொடுக்கும்.

5. கருவேப்பிலை:
பாரம்பரிய முறைப்படி கருவேப்பிலை உட்கொள்வதும் கருவேப்பிலை எண்ணெய் தடவுவதும் நமக்கு முடி வளர்ச்சியை கொடுக்கும். ஆதலால், கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் சேர்த்து லேசாக காய்ச்சிக் கொண்டு பிறகு அதனை நன்கு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து தலையில் தடவலாம்.
உண்மையில் விளக்கெண்ணை முடி வளர்ச்சிக்கு உதவுமா?
பொதுவாக, விளக்கெண்ணெய் முடி வளர்ச்சி அடர்த்திக்கு உதவுமா என்ற கேள்விக்கு இதுவரை மருத்து ஆதாரங்கள் இல்லை என்றாலும் விளக்கெண்ணை முடியை ஈரப்பதத்தோடு வைத்திருப்பதற்கும். முடி உடைவதை குறைப்பதற்கும் கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிப்பதற்கு உதவுகிறது.
மேலும், நாம் அளவுக்கு அதிகமாக எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. சில துளிகளே போதுமானது, அதோடு, முக்கியமாக நம்முடைய தலைமுடியை நாம் எப்பொழுதும் மென்மையாக கையாள்வது அவசியம்.
குறிப்பாக, திடீரென ஒருவருக்கு அதிக முடி உதிர்வு வழுக்கை அல்லது முடி மெலிதல் பிரச்சினை ஏற்பட்டால் கட்டாயம் தோல் மருத்துவரை அல்லது உங்களுடைய குடும்ப மருத்துவரனுடைய ஆலோசனை பெறுவது அவசியம்.