மூட்டு வலி நீங்க சத்தான முருங்கை கீரை கொள்ளு சூப்
Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சளி மூட்டு வலி விலகுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/4 கப் * பூண்டு - 2 பல்
இஞ்சி - 1/2 இன்ச்
சின்ன வெங்காயம் - 10 * கொத்தமல்லி - சிறிது
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
சீரகம் - 1 டீஸ்பூன் * மிளகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 லிட்டர். தாளிப்பதற்கு...
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
இடிச்ச சின்ன வெங்காயம் - 5
முருங்கைக்கீரை - 10 இலைகள் சூப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதனுடன் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு முறை கழுவிக்கொண்டு மீண்டும் குக்கர் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் நீர் ஊற்றி குக்கர் மூடி 3 முதல் 4 வசூல் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு விசில் இறங்கியதும் குக்கரை திறந்து அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சீரகம், மிளகு மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்க வேண்டும்.
விசில் இறங்கியதும் குக்கரில் உள்ளதை ஒரு பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸரில் சாறு வடிகட்டிய பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்ததையும் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிராம்பு பட்டையை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்பு அதில் இடிச்ச சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு பத்து முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி வடிகட்டி வைத்துள்ள சூப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு கலந்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பிறகு இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறக்கிய சூப்பில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறினால் சுவையான முருங்கைக்கீரை கொள்ளு சூப் ரெடி. இதை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது மூட்டு வலி சளி பிரச்சனை போன்றவை நீங்குவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.