ஜேர்மனியில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல்: தாக்குதல்தாரி ஒரு புலம்பெயர்ந்தோர்?
ஏற்கனவே ஜேர்மனி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
ஜேர்மனியில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல்
கடந்த ஆண்டு ஆகத்து மாதம், ஜேர்மனியிலுள்ள Solingen நகரில், உள்ளூர் விழா ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்தார்கள். தாக்குதல் நடத்தியவர் சிரியா நாட்டவர்.
அந்த விடயம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு முன் டிசம்பரில் Charlottenburg நகரில் புலம்பெயர்ந்தோர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். அவரும் சிரியா நாட்டவர்.
பின்னர் ஜனவரில், Aschaffenburg நகரில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றைக் குறிவைத்து 28 வயதான ஆப்கன் நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.
இந்நிலையில், ஜேர்மனியிலுள்ள Bielefeld நகரில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள விடயம் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
அந்நகரிலுள்ள புகழ்பெற்ற மதுபான விடுதி ஒன்றின் அருகே ஒருவர் திடீரென மக்களை கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.
அதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல்தாரி தப்பியோடிவிட்டார். அவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
ஆனால், அவர் விட்டுச் சென்ற கைப்பை ஒன்று பொலிசாரிடம் சிக்கியுள்ளது. அதில் இருந்த அடையாளை அட்டையிலிருந்து, அந்த நபர் ஒரு சிரியா நாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஜேர்மனியின் புதிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், இந்த தாக்குதல் புலம்பெயர்ந்தோருக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |