புனித பயணம் மேற்கொள்ள சென்ற 5 நண்பர்கள்: அடுத்து நேர்ந்த துயரம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் கார் மற்றும் லொறி மோதிய விபத்தில் நண்பர்கள் 5 பேர் பலியாகினர்.
நண்பர்கள்
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கின்துவாடி பகுதி அருகே கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த லொறி குறுகலான சாலையில் கார் மீது மோதியுள்ளது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மைசூரு மற்றும் மாண்டியா மாவட்டங்களில் அவர்கள் வசித்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.
அத்துடன் மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. பொலிஸார் இதுகுறித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |