ஒரே ஒரு அறிவிப்பு... தடாலடியாக சரிந்த தங்க நகை நிறுவனப் பங்குகள்: ரூ.5 லட்சம் கோடி இழப்பு
மத்திய கிழக்கு விவகாரம் எந்தத் தீர்வையும் எட்டாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தள்ளி போட வேண்டும் என கேட்டு கொண்டிருந்தார்.
தங்கம் வாங்குவதற்கு
ஈரான் போர் விவகாரம் ஒரு தீர்வை எட்டாமல் நாளுக்கு நாள் பதற்றமான சூழலிலேயே நீடிக்கிறது. இதனால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, எனவே கச்சா எண்ணெய் வாங்க இந்தியா கையிருப்பில் இருக்கும் டொலர்களை அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த சூழலில் தங்கமும் அதிகமாக வாங்கினால் நம் கைவசம் இருக்கும் டொலரை அத்தியாவசியமான பெட்ரோல், டீசலுக்கு செலவிட முடியாமல் வீணாக தங்கம் வாங்குவதற்கு பயன்படுத்த நேரிடலாம்.
எனவே டொலர் வெளியேற்றத்தை தடுக்கவும் நாட்டின் பொருளாதார நலனை காக்கவும் தேவையின்றி தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தவிர்க்க வேண்டும் என இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்க நகை வாங்குவதைக் குறைப்பதன் மூலம் இந்தியாவின் இறக்குமதிச் செலவைக் குறைக்க முடியும் என்பது அரசின் நோக்கம். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பங்குச் சந்தையில் வலுவாக எதிரொலித்துள்ளது.
பிரதமரின் இந்த வேண்டுகோள் நகை விற்பனையை பாதிக்கும் என முதலீட்டாளர்கள் அஞ்சியதால், இன்று பங்குச் சந்தையில் நகை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.

டாடா குழுமத்துக்கு சொந்தமான டைட்டன் (Titan) நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 6% வரை சரிந்து 4,227 ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்ததாக கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) நிறுவன பங்கு 8% சரிவை சந்தித்து 389 ரூபாய் என ஆனது.
பங்கு மதிப்பு சரிய காரணம்
அதே போல சென்கோ கோல்ட் (Senco Gold) நிறுவன பங்கு மதிப்பு 10% குறைந்து 326 ரூபாய் என வர்த்தகமானது. தங்கம் வாங்குவதை குறைக்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து, நகை நிறுவனங்களின் எதிர்கால லாபம் பாதிக்கும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் நகை விற்பனை நிறுவன பங்குகளை விற்பனை செய்தனர்.
இதுவே நகை விற்பனை நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிய காரணமாக அமைந்துள்ளது ஒட்டு மொத்தமாகவே இந்திய சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை கண்டன.

சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிவடைந்தது 76, 166 புள்ளிகள் என்ற அளவுக்கு சென்றது. அதே வேளையில் தேசிய பங்கு சந்தை குறியீடு நிஃப்டி 1 சதவீதம் சரிவடைந்து 23,845 புள்ளிகள் என வர்த்தகமானது.
மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் இன்று வர்த்தகத்தில் சரிவை சந்தித்தன. பங்குச்சந்தை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் வரை இழந்தனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |