இதுவரை 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்ய அரசாங்கத்தின் கசிந்த ஆவணங்கள்
Leaked Russian Records reveals 5 lakh russian soldiers died in ukraine war: உக்ரைன் போரில் இதுவரை 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக ரஷ்ய அரசாங்கத்தின் கசிந்த ஆவணங்களில் அம்பலமாகியுள்ளது.
5 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்யா தொடங்கியது.
இந்த போர் நடவடிக்கையில் இதுவரை லட்சக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய தரப்பு அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு வந்தாலும், ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியானது இல்லை.

இந்நிலையில் ரஷ்ய அரசாங்கத்தின் கசிந்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து BBC வெளியிட்டுள்ள தகவலின்படி, குறைந்தது 4,90,334 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த Cyber Partisans BY மற்றும் Silent Crow ஆகிய ஹேக்கர் குழுக்கள் நடத்திய இணையவழித் தாக்குதலை தொடர்ந்து பிபிசிக்கு, 2021ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட 1.1 கோடிக்கும் அதிகமான இறப்புகள் தொடர்பான பதிவுகள் கிடைத்துள்ளது.
சில நாட்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போர் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் நடவடிக்கையானது ரஷ்யாவின் இறப்பு விகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.