உக்ரைன் போரில் தப்பிய 5 சிங்கங்கள்., பிரித்தானியாவில் புதிய வாழ்க்கை
உக்ரைனில் போர் சூழலில் இருந்து மீட்கப்பட்ட 5 சிங்கங்கள் தற்போது பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளன.
போர் மண்டலத்தில் குண்டுகளின் சத்தம் மற்றும் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு, அநாதையாக கைவிடப்பட்ட இந்த உயிரினங்கள் சர்வதேச முயற்சியால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆபிரிக்க ஆண் சிங்கம் ரோரி மற்றும் பெண் சிங்கங்கள் அமானி, லிரா, வாண்டா ஆகியவை, பெல்ஜியத்தில் உள்ள மிருகக் காப்பகங்களில் தற்காலிக பராமரிக்கப்படு வந்த நிலையில், இப்போது பிரித்தானியாவின் Big Cat சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அவற்றுடன் யூனா என்ற மற்றொரு பெண் சிங்கமும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து சிங்கங்களும் ரஷ்யாவின் படையெடுப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவை.
இதில் வாண்டா என்ற பெண் சிங்கம் ஒரு குடியிருப்பில் சிறைபிடித்து, போஷாக்கு குறைவுடன் வளர்க்கப்பட்டது.
யூனா சிறிய சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்தது. போரின்போது குண்டு சிதறல்கள் அடைந்ததால் அதிர்ச்சியில் நடக்க முடியாத நிலையில் இருந்தது.
உக்ரைனின் Wild Animals Rescue Center இயக்குநர் நடாலியா போபோவா, இந்த விலங்குகளை பத்திரமாக மீட்டார். பின்னர் 500,000 பவுண்டுகள் நன்கொடை திரட்டி, இங்கிலாந்தில் புதிய மிருகக் காப்பகம் உருவாக்கப்பட்டது.
தற்போது சிங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வசதிகள் உள்ள நீண்ட உறைவிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்கின்றன!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |