அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலகளவில் அடுத்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
பாலினத் தேர்வுகள் குறுகிய, நீண்ட காலத்தில், எந்த மாதிரியான தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை அறிய, அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆய்வை நடத்தினர்.
கடந்த 50 ஆண்டுகளில் பிறந்த 3 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கலாசார ரீதியாக விருப்பம் கொண்ட நாடுகளில், பாலினம் பார்த்துத் குழந்தையை முடிவு செய்யும் போக்கு இன்னமும் நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 4.7 மில்லியன் குறைவான பெண்கள் பிறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வருங்காலத்தில் சமூக ஒற்றுமையை பெருமளவில் பாதிக்கும் என்று ஆய்வு கூறியது.
மேலும் இத்தகைய போக்கால், 2030 ஆண்டு, உலகின் மூன்றில் ஒரு பங்கினரில், இளம் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.
இது சமூக விரோத, வன்முறை நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தென் கிழக்கு ஐரோப்பா, தெற்காசிய, கிழக்காசிய நாடுகளில், கடந்த 40 ஆண்டுகளில், குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் நடைமுறை அதிகரித்துள்ளது.
பாலின பேதத்தை ஒழித்து சமத்துவத்தை உறுதிப்படுத்த சட்டக் கட்டமைப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிவருகிறது.