போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் இருந்து 27 எம்.பி.க்கள் ராஜினாமா!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் இருந்து மேலும் ஐந்து ஜூனியர் அமைச்சர்கள் புதன்கிழமை மொத்தமாக வெளியேறினர்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
மேலும் ஐந்து ஜூனியர் அமைச்சர்கள் புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் இருந்து மொத்தமாக வெளியேறியதைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை மாலையில் இருந்து ராஜினாமா செய்த டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 27 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் திடீர் ராஜினாமா!
"நல்ல நம்பிக்கையில், கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக, நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்," என்று ஐவரும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆளும் கன்சர்வேடிவ்களுக்குள் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.