பாகிஸ்தான் பெண்ணிடமிருந்து 5 பாஸ்போர்ட்டுகள், செல்போன்கள் பறிமுதல்!
PUBG மூலம் அறிமுகமான இளைஞருடன் சட்டவிரோதமாக இந்தியா வந்த சீமா ஹைதரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து உத்தரபிரதேச காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், சீமாவிடம் இருந்து 5 பாகிஸ்தான் பாஸ்போர்ட்கள், 2 வீடியோ கேசட்டுகள், 4 மொபைல் போன்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவை மீட்கப்பட்டன.
பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி முழுமையடையாததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சீமா ஒரு பெண் உளவாளி என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளின் இரண்டு நாள் விசாரணையின் போது இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சீமா ஹைதரின் உறவினர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிகிறார்களா, அவர்கள் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) முகவர்களா என்பது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஏடிஎஸ்ஸால் சீமா ஹைதரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
PUBG மூலம் தான் சந்தித்த சச்சின் மீனாவுடன் வாழ்வதற்காக சீமா ஹைதர் தனது நான்கு குழந்தைகளுடன் இந்தியாவிற்கு எல்லையைக் கடந்தார். நேபாளம் வழியாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |