5 நொடி விரல் சோதனை செய்தால் போதும்., நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே அதனை கண்டறிந்து உயிர்களை காப்பாற்ற ஒரு எளிய விரல்சோதனை உதவலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக, நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் இருமல், மூச்சுத்திணறல், மார்பு வலி போன்றவையாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் இதற்கான ஆரம்ப அறிகுறிகள் கைகளிலும் தோன்றலாம்.
விரல் சோதனை செய்வது எப்படி?
உங்கள் இரண்டு கைகளின் நகங்களை ஒன்றோடொன்று அழுத்தவும்.
இதைச் செய்யும்போது நகங்களுக்கு இடையில் ஒரு சிறிய வைர வடிவச்சிறு துளை உள்ளது என்பதை கவனிக்கவும்.
இந்த சிறு துளை இல்லையெனில், உங்கள் விரல்கள் வீங்கி இருக்கலாம் - இது நுரையீரல் புற்றுநோயின் அடையாளமாக இருக்கக்கூடும்.
ராய் கேஸில் நுரையீரல் புற்றுநோய் அறக்கட்டளை இதை ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை அறிகுறியாக கூறியுள்ளது. இது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய அறிகுறிகள்
- தொடர்ச்சியான இருமல்
- மூச்சுத்திணறல்
- இருமலின் போது இரத்தம் உமிழ்தல்
- காரணமில்லா உடல் எடை குறைவு
- மூச்சு விடும் போது அல்லது இருமும் போது வலி
என்ன செய்ய வேண்டும்?
நுரையீரல் புற்றுநோய் அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக உள்ளது. NHS அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 43,000-க்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் வயதானவர்களிடம் காணப்படும் ஒரு நோயாகும்.
நீங்கள் இந்த அறிகுறிகளை கவனித்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்யுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Five-second finger test, early stage lung cancer, lung cancer symptoms, Five-second self lung cancer test