ஐந்து முறை திருமணம் செய்த கோடீஸ்வரரை நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள பிள்ளைகள்:அவரது சொத்து மதிப்பு
பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (93), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். தற்போது அவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார்.
உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு புகழ்பெற்ற ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார் Rupert Murdoch.
அவரது சொத்து மதிப்பு 2,030 கோடி அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Pic: News Corp
தந்தையை நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள பிள்ளைகள்
ஐந்து முறை திருமணம் செய்த Rupertக்கு ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
1999ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியான அன்னாவை விவாகரத்து செய்தபோது, தனது சொத்துக்கள் தொடர்பில் முடிவொன்றை செய்திருந்தார் Rupert.
அதாவது, Rupert மரணமடையும் நிலையில், அவரது சொத்துக்கள் அவரது மூத்த நான்கு பிள்ளைகளான Prudence, Elisabeth, Lachlan மற்றும் James ஆகியோரைச் சென்றடையும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
Pic: Reuters
ஆனால், சமீபத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார் Rupert.
தனது மூத்த மகனான Lachlan மட்டுமே தனது தொழிலை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும், மற்ற பிள்ளைகள் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கூறிவிட்டார் Rupert.
ஆகவே, தந்தையின் இந்த திடீர் முடிவை எதிர்த்து, James, Elisabeth மற்றும் Prudence ஆகியோர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.
எதனால் தன் முடிவை மாற்றிக்கொண்டார் Rupert?
விடயம் என்னவென்றால், Rupert வலதுசாரிக் கருத்துக்கள் கொண்டவர். அவரது மூத்த மகனான Lachlanம் தன் தந்தையைப் போலவே வலதுசாரிக் கருத்துக்கள் கொண்டவர்.
Pic: Reuters
ஆனால், நீதிமன்றம் சென்றுள்ள மற்ற மூன்று பிள்ளைகளும், மிதவாத மாற்றுக் கருத்து கொண்டவர்கள்.
சமீபத்தில், Rupertஇன் இரண்டாவது மகனான James, தன் தந்தையின் ஊடகங்களில் ஒன்றான Fox Newsஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், கமலா ஹரிஸுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
Pic: AP
அவரது சகோதரியான Elisabethம் Fox Newsஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விடயங்களால் கோபமடைந்துள்ளதே, Rupert தன் முடிவை மாற்றிக்கொண்டதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
அதாவது, அவரது பிள்ளைகளின் அரசியல் பார்வையும் Rupertஇன் கொள்கைகளும் வெவ்வேறாக இருந்ததே, Rupert தனது சொத்துக்கள் தொடர்பிலான முடிவை மாற்றிக்கொள்ள காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது.
Pic: PA
Pic: Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |