காசாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தபோது கவனம் ஈர்த்த குழந்தை: பாட்டியை சந்திக்கும் நெகிழவைக்கும் காட்சிகள்
காசாவில் பிணைக்கைதியாக 49 நாட்கள் வைக்கப்பட்டிருந்தாள், 5 வயதேயான குழந்தை ஒருத்தி. அப்போது, பத்திரிகைகளில் அதிக அளவில் அவளைக் குறித்த செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஹமாஸ் பிடியிலிருந்த அவள், தற்போது, தன் தாயுடன் காசாவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாள். அவள் தன் பாட்டியை சந்திக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
49 நாட்கள் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தை
வெறும் 5 வயதில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அனுபவம் ஒரு குழந்தையை எந்த அளவுக்கு பாதித்திருக்கும். ஆனால், காசாவிலுள்ள சுரங்கப்பாதைகளில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தபோதும், அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த ஒரு குழந்தை Emilia Alony, (5).
Schneider Children's Hospital
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, எமிலியா, தன் தாய் Danielleஉடன் தன் சித்தி வீட்டுக்குச் செல்லும்போது, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அவர்களை பிடித்துச் சென்று காசாவில் 49 நாட்கள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.
இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நேற்று ஹமாஸ் குழுவினரால் விடுவிக்கப்பட்ட எமிலியா தன் பாட்டியை சந்திக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Schneider Children's Hospital
எமிலியாவின் பாட்டி அவளைக் கட்டியணைத்துக்கொள்ள, இத்தனை நாட்களுக்குப் பிறகு பாட்டியுடன் இணைந்த சந்தோஷத்தில் எமிலியா பூரிப்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |