நீச்சல் குளத்தில் மூழ்கிய 5 வயது பிரிட்டிஷ் சிறுவன்: ஸ்பெயின் ஹோட்டலில் பரிதாபம்
5 Years Old Boy died In Lanzarote Pool, Spain: ஸ்பெயினில் நீச்சல் குளத்தில் தத்தளித்த 5 வயது பிரித்தானிய சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
5 வயது சிறுவன் உயிரிழப்பு
ஸ்பெயினின் லான்சரோட் தீவில் உள்ள பிளயா பிளான்கா(Playa Blanca) ரிசார்ட்டில் வியாழக்கிழமை பிற்பகல் 5 வயது பிரித்தானிய சிறுவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட போது மயக்க நிலையில் இருந்த சிறுவனுக்கு உடனடியாக அங்கிருந்த மருத்துவரும், காவலாளியும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் தீவிர சிகிச்சைகள் அளித்து சிறுவனின் நாடித்துடிப்பை மீட்டெடுத்தனர்.

பின்னர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கிரான் கனாரியா தீவில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சிறுவன் மாற்றப்பட்டார்.
மாடெர்னோ பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சைகள் அளித்தும் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை உள்ளூர் அதிகாரிகளும் உடனடியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |