வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 5 வயது பிரித்தானிய சிறுமி: சோகத்தில் பெற்றோர்
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 5 வயது சிறுமி
பிரித்தானியாவின் பெம்பிரோக்ஷைர்(Pembrokeshire) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அலிசியா சாலிஸ்பரி(Alysia Salisbury) என்ற 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை இரவு தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் க்ரிமிச் பகுதிக்கு அருகிலுள்ள பொன்டிகிளாசியர்(Pontyglasier) என்ற சொத்துக்கு அவசர சேவைகள் விரைந்தனர்.
WALES NEWS SERVICE
மறுபுறம் வெல்ஷ் ஆம்புலன்ஸ் சேவை, மற்றும் வெல்ஷ் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்தனர் இருப்பினும் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த 5 வயது சிறுமி அலிசியா மிகவும் அழகான மகள் மற்றும் சகோதரி என்று அவரது குடும்பத்தினர் விவரித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இரங்கல்
துர்திஷ்டவசமாக ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
WALES NEWS SERVICE
அதில் ஒருவர் இதயம் நொறுங்கிவிட்டது, சிறுமியுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.