காசா அகதிகள் முகாமில் தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
காசா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்து.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது கடந்த சனிக்கிழமை 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
CNBC
மேலும், தாக்குதலின் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று நடத்திய அகதிகள் முகாம் தாக்குதலில் நடத்தியதால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
காசா எல்லை வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
CNBC
இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேலானது அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது.
மேலும் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்படும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Jabalia refugee camp blast: ISRAEL COMPLETELY DESTROYS GAZA'S LARGEST REFUGEE CAMP
— Islam Channel (@Islamchannel) October 31, 2023
BREAKING NEWS: Israeli airstrike obliterates Jabalia camp, Gaza's largest refugee camp, claiming the lives of more than 100 Palestinians. An overwhelmed Indonesian hospital provides aid and treats… pic.twitter.com/yCXMH8ioAO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |