500,000க்கும் அதிகமான கண்ணிவெடிகள்: உக்ரைனிய எல்லையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கை
உக்ரைனில் வடக்கு பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா அதிதீவிரமான ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
ரஷ்யாவின் பெல்கோரோட் நகரம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியது.
பெல்கோரோட் நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 24 பேர் வரை உயிரிழந்துள்ளனர், 108 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும், 37 தொகுப்பு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
கண்ணிவெடிகள்
இந்நிலையில் உக்ரைனின் வடக்கு எல்லை பகுதியில் கிட்டத்தட்ட 500,000க்கும் மேற்பட்ட டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு வருகின்றன.
More than 500,000 anti-tank mines were planted on the northern border of Ukraine
— NEXTA (@nexta_tv) January 2, 2024
This was reported by the commander of the united forces of the AFU, Serhiy Nayev. pic.twitter.com/gggUuqG55e
இந்த தகவலை உக்ரைனிய பாதுகாப்பு படையின் தளபதி Serhiy Nayev தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் வடக்கு உக்ரைனிய எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |