ரஷ்யாவால் இந்தியாவிற்கு அடுத்த பேரிடி... ஒப்புதல் அளித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இருகட்சி ஆதரவு பெற்ற ரஷ்யா மீதான தடைகள் மசோதாவுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தகப் பங்காளிகள்
குறிதத மசோதாவைப் பயன்படுத்தி, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட ரஷ்யாவின் வர்த்தகப் பங்காளிகள் மீது புதிய வரிகள் விதிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிய வந்துள்ளது.

இந்த மசோதா வெற்றிபெறும் என்றால் ரஷ்ய எண்ணெய் அல்லது யுரேனியத்தை தெரிந்தே வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும்.
அப்படி ஒரு சூழல் உருவானால், அது ரஷ்யாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் மூலம் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு சமாதான ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இப்படியான ஒரு மசோதாவிற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவிக்கையில், புதன்கிழமை அன்று அவர் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்ததாகவும், அச்சந்திப்பின்போது, பல மாதங்களாகத் தயாரிப்பில் இருந்து வரும் அந்த மசோதாவிற்கு ஜனாதிபதி தனது ஆதரவைத் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் நிலைத் தடைகள்
இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். மசோதா தொடர்பில் அடுத்த வாரமே வாக்கெடுப்பு நடைபெறக்கூடும் என்று கிரஹாம் கூறியுள்ளார்.
கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த மசோதா, ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு, யுரேனியம் மற்றும் பிற ஏற்றுமதிப் பொருட்களை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரிகளையும் இரண்டாம் நிலைத் தடைகளையும் விதிக்க அமெரிக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்தத் தடைகள் தொகுப்பில் ட்ரம்ப்பிற்காக சில திருத்தங்களையும் நெகிழ்வுத்தன்மையையும் வெள்ளை மாளிகை இதற்கு முன்பு வலியுறுத்தியிருந்தது, ஆனால் அது குறித்து முறையான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் 50 சதவீத வரிகள் இந்தியா மீது அமுலில் இருக்கும் நிலையில், தற்போது 500 சதவீதம் வரையில் வரி என்பது, இந்திய அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதில் நிபுணர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |