ரஷ்யா-உக்ரைன் போரில் மாயமான 50,000 பேர்கள்... விசாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம்
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 50,000 பேர்கள் குறித்து விசாரிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காணமால் போவோர்
மட்டுமின்றி, இரு தரப்பினராலும் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 16,000 போர்க் கைதிகள் மற்றும் பொதுமக்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கியதும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது போரினால் காணமால் போவோர் தொடர்பில் கண்டறிய அமைப்பு ஒன்றை உருவாக்கியது.
இந்த நிலையில், அப்போதிருந்தே காணாமல் போனவர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 50,000 என எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உறுதியான தகவல்
இதில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் என்றே சுட்டிக்காட்டியுள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் 23,000 பேர்கள் மாயமான விவகாரம் குறித்து விசாரணை தொடங்கியதாக கூறும் செஞ்சிலுவைச் சங்கம்,
அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களா அல்லது கொல்லப்பட்டனரா, இல்லை போருக்கு பயந்து தலைமறைவாக உள்ளனரா என்பதில் இதுவரை உறுதியான தகவல் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் பெரும்பாலான அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |