படிக்காமலே ரூ.50,000 மேல் மாத வருமானம்.. தோசை மாஸ்டரின் வீடியோ வைரல்
மாதத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேல் வருவாய் பெறும் தோசை மாஸ்டர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே இளைஞர்கள் பலரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஏதாவது ஒரு கடை அல்லது ஹொட்டல் வைத்து அதன் மூலம் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது தான் பலரது ஆசையாக இருக்கும்.
ஆனால், இங்கு தெருக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் வழங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதித்து வருகிறார்.
வைரல் வீடியோ
தோசை மாஸ்டர் ஒருவர் மாதத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேல் வருவாய் ஈட்டுவதாகவும், படித்திருந்தால் 30 அல்லது 40 ஆயிரம் ரூபாய் வேலையில் அமர்ந்திருப்பேன் என கார்ப்பரேட் ஊழியர்களை பார்த்து அவர் கிண்டல் செய்வதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Itna bhi sach nhi bolna tha uncle ??pic.twitter.com/ojjPcAaY8p
— Ashman kumar Larokar (@ASHMANTWEET) January 10, 2024
அவர் அந்த வீடியோவில், "மூன்று தோசைகளை புரட்டி போட்டுக் கொண்டே எனக்கு படிக்க தெரியாது. நான் நிறைய சம்பாதிக்கிறேன். படித்திருந்தால் கார்ப்பரேட் நிறுவனத்தில் வழங்கப்படுவது போல ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெறுவேன்" என்று கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |