பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கு ஏற்படவுள்ள பணியாளர் நெருக்கடி
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கு (NHS) மிகப்பெரிய பணியாளர் நெருக்கடி ஏற்படவுள்ளது.
பிரித்தானிய அரசின் குடிவரவு திட்டம் காரணமாக செவிலியர்கள் வேலையை விட்டு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Royal College of Nursing (RCN) நடத்திய ஆய்வின்படி, 50,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செவிலியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, நிகர புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு பணியாளர்கள் Indefinite Leave to Remain (ILR) பெரும் காலத்தை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு உயர்ந்த கல்வித் தகுதி, அதிகமான ஆங்கில மொழித் திறன் ஆகியவை கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்த மாற்றங்கள், NHS-ல் பணிபுரியும் 2 லட்சம் வெளிநாட்டு செவிலியர்களில் 25 சதவீதம் பேரை நேரடியாக பாதிக்கும்.
ஆய்வில் கலந்துகொண்ட 5,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களில், 60 சதவீதம் பேர் பிரித்தானியாவில் தொடர்வது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 46,000 பேர் நிரந்தரமாக வெளியேறக்கூடும் அபாயம் உள்ளது.
RCN பொதுச் செயலாளர் நிக்கோலா ரேஞ்சர் கூறியதாவது, "இந்த திட்டம் நோயாளிகளுக்கு ஆபத்தானது. சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வெற்றியில் ஆர்வம் கொண்ட எந்த அமைச்சரும் ILR-க்கான தகுதி காலத்தை நீட்டிக்க முயற்சிக்க மாட்டார்கள்" என கூறியுள்ளார்.
மேலும், ILR விண்ணப்பிக்க கட்டணம் தற்போது 3039 பவுண்டாக உள்ளது. இது செயலாக்கச் செலவான 523 பவுண்டுகளை விட பல மடங்கு அதிகம். 2003-ல் இந்த கட்டணம் வெறும் 155 பவுண்டு மட்டுமே இருந்தது.
செவிலியர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து பெரும் குழப்பத்தில் உள்ளனர். குடும்பம், நிதிநிலை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை, NHS-ல் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் அரசின் முயற்சிகளை முற்றிலும் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK nurses immigration policy 2025, 50,000 nurses may quit NHS, Royal College of Nursing survey, NHS staffing crisis immigration, Indefinite Leave to Remain UK, Keir Starmer immigration reforms, UK healthcare worker shortage, NHS foreign nurses visa rules, UK nurse retention challenges, Immigration impact on NHS staff