உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட 10 நகரங்கள்: 4 இடங்களில் இந்திய நகரங்கள்
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், உலகின் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரங்களில் இந்தியன் 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
குறிப்பாக இப்பட்டியலில் முதலிடத்தில் மும்பை உள்ளது.
இந்தியாவின் நிதி தலைநகரம் எனப்படும் மும்பையில், சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கின்றனர். இது உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.
2-ஆம் இடத்தில் காங்கோ ஜனநாயக குடியரசின் Kasai-Oriental நகரம் உள்ளது. 3-ஆம் இடத்தில் அதே நாட்டின் Beni நகரம் உள்ளது.

4-ஆம் இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் உள்ளது. சதுர கிலோமீற்றருக்கு 25,000 பேர் வசிக்கும் இந்த நகரம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநகரமாகக் கருதப்படுகிறது.
5-ஆம் இடத்தில் இந்தியாவின் சூரத் நகரம் உள்ளது. வைரம் மற்றும் நெய்தல் தொழில்களின் மையமாக விளங்கும் இந்த நகரம், வேலை வாய்ப்புகளுக்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் பெருமளவில் குடிபெயர்கின்றனர்.
6-ஆம் இடத்தில் ஹொங்ஹொங்கின் தமர் (Tamar), 7-ஆம் இடத்தில் காங்கோவின் தலைநகரான கின்ஷாசா, 8-ஆம் இடத்தில் சோமாலியாவின் தலைநகரான Muqdisho ஆகியவை உள்ளன.

9-ஆம் இடத்தில் மீண்டும் இந்தியாவின் அகமதாபாத் நகரம் உள்ளது. குஜராத்தின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் அகமதாபாத் மக்கள் அடர்த்தியில் உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாகும்.
10-ஆம் இடத்தில் இந்தியாவின் பெங்களூரு உள்ளது. இந்தியாவின் IT தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் 1.3 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இந்த பட்டியல், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேலாண்மை இல்லாதபோது வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவதை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், நன்கு நிர்வகிக்கப்படும் நகரங்கள் மக்களுக்கு வளர்ச்சி வசதிகளை வழங்கி வாழ்க்கையை எளிதாக்கும் என அறிக்கை குறிப்பிடுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Top 10 densely populated cities, Mumbai most crowded city 2025, Surat population density ranking, Ahmedabad urban density news, Bengaluru IT hub population rise, Karachi densely populated city, Kinshasa Congo population density, Mogadishu Somalia crowded city, Hong Kong Tamar density ranking, UN report on global city density