சீமான் கட்சியில் இருந்து 500 பேர் விலகி வேறொரு கட்சியில் இணைந்தனர்! தம்பி என சொல்வது போலி: முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தம்பி என்று கூறி அழைப்பது போலித்தனமானது என்று கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை இப்போதே துவங்கிவிட்டன, குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் கமல், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் ஸ்டாலின் போன்றோர் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு குறிப்பிட்ட வாக்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தமிழகத்தில் இதற்கு முன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு குறிப்பிட்ட அளவு வாக்கை பெற்று திரும்பி பார்க்க வைத்தது.
இதனால் இந்த முறை அந்த கட்சி எவ்வளவு வாக்கு பெறும்? யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பில் இருந்த 500 பேர் விலகி திமுக-வில் இணைந்தனர்.
இந்நிலையில், சீமான் எப்போதும் பேசும் போது நம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தம்பி என்று அழைப்பார்.
ஆனால், இதை போலி என்றும், சீமான் அப்படி சொல்வது போலித்தனமானது, நடிக்கிறார் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.