ஒரே போட்டியில் 51 ரெட் கார்டு: பிரேசில் கால்பந்து போட்டியில் அதிர்ச்சி
51 Red cards were issued in Brazil Football Game: உலக கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஆட்டத்தில் 51 ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே போட்டியில் 51 ரெட் கார்ட்
பிரேசிலில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இடையிலான காம்ப்பியோனாட்டோ மினேரோ(Campeonato Mineiro) அரையிறுதி போட்டியில், 60 நிமிடங்களுக்கு உள்ளாகவே மொத்தம் 51 பேருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியாகவும், உலக சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
GUINNESS WORLD RECORD HAS BEEN BROKEN IN BRAZIL IN A FOOTBALL GAME. A Guinness World Record was broken for the number of red cards in a single game, the Minas Gerais Under-20 Championship clash between Uberlândia and Mamoré saw 51 sendings off, including 43 players and eight members of coaching staff 🤯🟥 A mass brawl that began in the 54th minute saw the referee break a record that had stood since 2011 for the most expulsions in a single fixture, according to reports from O Tempo 😭 The referee's report indicated that the chaos wasn't limited to the players. Six ball boys reportedly participated in the aggression, throwing punches, kicks, and objects at players and members of the Mamoré coaching staff. Stretchers and chairs were also used in the fighting that took close to 40 minutes to subside, while local military police were forced to attend to assess the vandalism inside the stadium after the air had cooled 🇧🇷
— Peter O.U (@Parisdreams_emp) November 4, 2026
மினாஸ் ஜெரைஸ் பகுதியில் உள்ள எஸ்டாடியோ பார்கே டோ சஃபியா மைதானத்தில் உபெர்லாண்டியா(Uberlandia) மற்றும் மாமோரே(Mamore) இடையே நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்களால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
மோதலாக வெடித்த வெற்றிக் கொண்டாட்டம்
மாமோரே அணியின் வீரர் டாவி ஆட்டத்தின் 54 வது நிமிடத்தில் தனது 3 வது கோலை அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் அவரது அணியை முன்னிலை பெற செய்தார்.
மேலும் கோல் அடித்த மகிழ்ச்சியில் உபெர்லாண்டியா அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று கேலி செய்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உபெர்லாண்டியா அணியின் கோல் கீப்பிங் பயிற்சியாளர் பாவ்லோ செர்ஜியோ எதிரணி வீரர் டாவியை தாக்க முயற்சி செய்தார்.
இந்த சம்பவமே பெரும் மோதலுக்கு வழிவகுத்தது. முதலில் 3 வீரர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மோதலை தொடர்ந்து மேலும் 48 பேருக்கு சிவப்பு அட்டை வழங்க நடுவர் உத்தரவிட்டார்.