2024-ல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை: அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கை
2024ம் ஆண்டில் மொத்தமாக 54 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.
2024-ல் பறிப்போன பத்திரிக்கையாளர்கள் உயிர்
பொதுமக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்(Reporters Without Borders) அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2024 ஆம் ஆண்டில், அதிர்ச்சியூட்டும் விதமாக 54 ஊடகத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் இதில் 31 பேர் தீவிர போர் மண்டலங்களில் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
54 journalists killed in 2024: 31 of them in combat zones — Reporters Without Borders
— NEXTA (@nexta_tv) December 12, 2024
The most dangerous region was Gaza, where 16 media workers lost their lives. The organization also noted that since February 24, 2022, at least 13 journalists have been killed in Ukraine.
The… pic.twitter.com/PJu4V70deH
மிகவும் ஆபத்தான பகுதி
பத்திரிகையாளருக்கு மிகவும் ஆபத்தான பகுதியாக காசா பகுதியை அறிக்கை குறிப்பிட்டுள்ளது, அங்கு மொத்தமாக 16 ஊடக தொழிலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து இதுவரை உக்ரைன் போர் பிராந்தியத்தில் குறைந்தது 13 ஊடக தொழிலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பத்திரிகையாளர்களின் சிறைப்பிடிப்பு
இந்த அறிக்கையானது பத்திரிகையாளர்களின் சிறைப்பிடிப்பு போக்கை எடுத்துக்காட்டுகிறது.
அதன்படி, தற்போது, உலகளவில் 550 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 7% அதிகரித்துள்ளது.
சீனா (ஹாங்காங் உட்பட -124), மியான்மர்- 61, இஸ்ரேல் -41 மற்றும் பெலாரஸ்-40 ஆகிய நாடுகள் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேரை சிறையில் அடைத்து வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |