22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
54 year old women give baby brith by 22 year old frozen embryo: 22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் 54 வயதான பெண் குழந்தை பெற்றுள்ளார்.
22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் குழந்தை
54 வயதான கிறிஸ்டினா ராப்டி ட்ஸெலெபி மற்றும் 60 வயதான கான்ஸ்டன்டினோஸ் ராப்டிஸ் என்ற கிரேக்கத் தம்பதி, அக்டோபர் 2025 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்தில் தங்களது ஒரே மகனான ஜார்ஜியாஸை இழந்தனர்.

அந்த நாட்டின் சட்டப்படி, செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற அதிகபட்ச வயதாக 54 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற திட்டமிட்ட கிறிஸ்டினா ராப்டி ட்ஸெலெபிக்கு இன்னும் 2 மாதங்களே இருந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கரு முட்டையை பயன்படுத்தி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி ஏதென்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 7 பவுண்ட், 11 அவுன்ஸ் எடையில் பிறந்த தங்களது மகளுக்கு, இறந்த தங்களது மகனின் நினைவாக ஜார்ஜியா என அவரது பெயரை சூட்டினர்.

இது குறித்து பேசிய ராப்டி-ட்ஸெலெபி, "அரசாங்கத்தின் காலக்கெடுவான இரண்டரை மாதங்கள் மட்டுமே எனக்கு அவகாசம் இருந்தது. காலக்கட்டுப்பாடுகள் மற்றும் சட்டக் கட்டமைப்பால் விதிக்கப்பட்ட கடுமையான வயது வரம்புகள் காரணமாக, நாங்கள் மிக விரைவாகச் செயல்பட வேண்டியிருந்தது" என தெரிவித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, வெற்றிகரமான கர்ப்பத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான மனிதக் கருவானது, 31 ஆண்டுகளுக்கும் பழமையானதாக இருந்தது.