இந்தியாவிற்கு 549 ஓட்டங்கள் இலக்கு - பாரிய சாதனை படைக்க போகும் தென் ஆப்பிரிக்கா
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 T20 போட்டி அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு 534 ஓட்டங்கள் இலக்கு
தற்போது, கவுகாத்தியில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, செனுரன் முத்துசாமியின் அதிரடி சதம் மூலம் முதல் இன்னிங்ஸில் 489 ஓட்டங்கள் குவித்தது.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, வெறும் 201 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

289 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா அணி, தனது 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இதன் மூலம், இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக 549 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆசிய மைதானத்தில் எந்த அணியும், 400க்கு அதிகமான ஓட்டங்களை சேஸ் செய்தது இல்லை.
இதுவே இதுவரை இந்தியாவிற்கு சொந்த மண்ணில்நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு ஆகும். முன்னதாக 2004 ஆம் ஆண்டில் நாகபூரில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 543 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்ததே அதிகபட்சமாக இருந்தது.

2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி, 16 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா படைக்கபோகும் சாதனை
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி சொந்த நாட்டில் ஒயிட் வாஷ் செய்து தொடரை வெல்லும்.

இந்திய அணி இதுவரை 2 முறை மட்டுமேசொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆகி தொடரை இழந்துள்ளது.
முன்னதாக 1999-2000 ஆம் ஆண்டில் ஹான்சி 2-0 என்ற கணக்கில் குரோனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியிடம் ஒயிட் வாஷ் ஆகி தொடரை இழந்தது.

2024 ஆம் ஆண்டில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியிடம் ஒயிட் வாஷ் ஆகி தொடரை இழந்தது.
இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 முறை ஒயிட் வாஷ் செய்த ஒரே அணி என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா படைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |