இஸ்ரேலிய தாக்குலில் ஈரானில் 555 பேர் பலி! 131 நகரங்கள்..வெளியான தகவல்
அமெரிக்கா, இஸ்ரேலியா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
அதே சமயம், ஈரான் மற்றும் ஈரானிய ஆதரவுபெற்ற போராளிகள் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஏவுகணைகளை வீசினர்.
அத்துடன் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை தாக்கியதாகவும் தெரிகிறது.
555 பேர்
இந்த நிலையில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானில் இதுவரை குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் 130க்கும் மேற்பட்ட நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இஸ்ரேலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |