இரண்டு ஆண்டுகளாக அலமாரியில் தந்தையின் உடல்! மகன் கூறிய அதிர்ச்சி காரணம்
ஜப்பானில் நபர் ஒருவர் இறந்த தந்தையின் உடலை அலமாரியில் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
56 வயது நபர்
டோக்கியோவில் சீன உணவகத்தை நடத்தி வருபவர் 56 வயது நோபுஹிகோ சுசுகி. இவர் கடந்த ஒரு வாரமாக தனது உணவகத்தை திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.
பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிஸார் நோபுஹிகோவின் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டு அலமாரியில் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து பொலிஸார் நோபுஹிகோவிடம் விசாரித்தபோது அவர் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ச்சி காரணம்
அதாவது, 2023ஆம் ஆண்டில் தனது 86 வயது தந்தை இறந்துவிட்டதாகவும், தான் வீடு திரும்பியபோது அதனைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அதிகளவு செலவாகும் என்பதால், அதனை தவிர்க்கவே அவரது உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நோபுஹிகோவை கைது செய்த பொலிஸார் மேலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |