எஸ்பிஐ வங்கியில் 58 கிலோ தங்கம் மற்றும் ரூ.8 கோடி பணம் கொள்ளை
கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.8 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
வங்கியில் கொள்ளை
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளையில் கொள்ளை நடந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த நபர்கள் 58 கிலோ தங்கம் மற்றும் ரூ.8 கோடி ரொக்கத்துடன் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் வங்கிக்குள் புகுந்து, ஊழியர்களைக் கட்டிப்போட்டு மிரட்டியுள்ள கொள்ளையர்கள் ராணுவ உடையில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
பின்னர், தப்பித்துச் சென்ற குற்றவாளிகளின் வாகனம் மகாராஷ்டிராவின் பந்தர்பூரில் கண்டுபிடிக்கப்பட்டதால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் காவல்துறையினர் இணைந்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |