இந்தியாவின் 5வது பெண் கோடீஸ்வரர்... மொத்த சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி: யார் இந்த லீனா
USV இந்தியா நிறுவனத்தின் தற்போதைய தலைவரான லீனா திவாரி என்பவரே, இந்தியாவின் பெண் கோடீஸ்வரர்களில் 5வது இடத்தில் உள்ளார்.
சொத்து மதிப்பு 30,000 கோடி
மருந்து தயாரிக்கும் நிறுவனமான USV இந்தியா, 1961ல் லீனாவின் தந்தை Vithal Gandhi என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை தமது கணவருடன் இணைந்து லீனா திவாரி நிர்வகித்து வருகிறார்.
பொதுவாக ஊடகங்களில் முகம் காட்ட மறுக்கும் லீனா திவாரி, தமது நிறுவனம் தொடர்பில் கூட இதுவரை விளிப்படையாக கருத்து கூறுவதில்லை. லீனா திவாரியின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது சுமார் 30,000 கோடி என்றே கூறப்படுகிறது.
இந்தியாவில் பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் Biocon நிறுவனத்தின் Kiran Mazumdar-Shaw, இவருக்கு அடுத்து Nykaa நிறுவனத்தின் Falguni Nair மற்றும் Zoho நிறுவனத்தின் ராதா வேம்பு என்ற தமிழர் ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் முதல் ஐந்து இடங்களில்
லீனா திவாரியின் பார்மா நிறுவனம் இதயம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துத் துறையில் இந்தியாவின் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. மட்டுமின்றி இவர்களின் Glycoment எனும் நீரிழிவு தொடர்பான மருந்து உள்ளூர் தேவையில் முதல் 3 இடங்களில் உள்ளது.
மும்பை மாநகரில் பிறந்த லீனா திவாரி, முமையிலேயே கல்லூரி படிப்பை முடித்து, பின்னர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றார். பிரஷாந்த் திவாரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |