பும்ரா Return.. கே.எல்.ராகுல் விலகல்! கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து Vs இந்தியா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், 5 வது போட்டிக்கான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் திகதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார். 4 -வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத பும்ரா மீண்டும் திரும்பியுள்ளார்.
சக அணி வீரர் மோதியதால் 12 ஆண்டுகளில் முதல்முறையாக ரன்அவுட்! விரக்தியில் வெளியேறிய வில்லியம்சன் (வீடியோ)
அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மார்ச் 2-ம் திகதி தொடங்கும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக தமிழ்நாடு அணியில் இணைவார்.
5 -வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
* ரோகித் சர்மா (Rohit Sharma)
* ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah)
* யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal)
* சுப்மன் கில் (Shubman Gill)
* ரஜத் படிதார் (Rajat Patidar)
* சர்பராஸ் கான் (Sarfaraz Khan)
* துருவ் ஜூரல் (Dhruv Jurel)
* கேஎஸ் பாரத் (KS Bharat)
* தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal)
* அஷ்வின் (Ravichandran Ashwin)
* ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja)
* அக்சர் படேல் (Axar Patel)
* குல்தீப் யாதவ் (Kuldeep Yadav)
* முகமது சிராஜ் (Mohammed Siraj)
*முகேஷ் குமார் (Mukesh Kumar)
* ஆகாஷ் தீப் ( Akash Deep)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |