இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?
இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12:31 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்
இந்திய பெருங்கடலில் இன்று நண்பகலில் 12:31 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கரமான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
1,326 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பினும் எந்த நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.
அதே சமயம் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |