கிரீஸின் பிரபல சுற்றுலா தீவை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு
கிரீஸின் பிரபல சுற்றுலா தீவான கிரீட்டை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தீவின் கிழக்கு கடற்கரையில் Palekastro கிராமத்தில் 10 கிமீ ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து தீவில் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
பொலிசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் கிரீட் தீவின் கிழக்கில் கட்டிடங்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளதா என சோதனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
An #earthquake with a magnitude of 6.3 MW occurred off the coast of #Crete, #Greece. The earthquake was felt as far as #Cairo & #Istanbul, but with little force. pic.twitter.com/dhoHI3agW5
— 🌎 Sarwar 🌐 (@ferozwala) October 12, 2021
மூன்று வாரங்களுக்குப் முன்பு கிரீட் தீவில் ஏற்பட்ட நிலநடுகத்தில் நபர் ஒருவர் பலியானார் மற்றும் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை சேதமடைந்தது நினைவுக் கூரத்தக்கது.
Breaking : 6.3 magnitude #earthquake off the coast of Crete#Athens #crete #Turkey pic.twitter.com/OdXub3Gun2
— Hashtag Elyoum (@Hashtagelyoum) October 12, 2021