அமெரிக்காவில் மின்சாரம் இல்லாமல் 70,000 பேர் தவிப்பு: நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை வெளியீடு
அமெரிக்காவில் டிசம்பர் 20ம் திகதி அதிகாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிசம்பர் 20ம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் சரிந்ததுடன், வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.
சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் உள்ள கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
AP Photo
இதன் காரணமாக சாலைகள், பொது கட்டிடங்கள் போன்றவை பலத்த சேதமடைந்து இருப்பதுடன் பல வீடுகள் சரிந்து விழுந்துள்ளது.
இதில் 2 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 11 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும் மீட்பு பணி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 70,000 மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
AP Photo
இதனை தொடர்ந்து, சேதமடைந்த கட்டிடங்கள் குறித்த விவரங்களை அரசு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். முக்கிய பகுதிகளுக்கு 8 முதல் 10 மணி நேரங்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்றும், மற்ற இடங்களில் தாமதமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர் மழை காரணமாக தான் மீண்டும் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
AP Photo